மனமே மந்திரம்
சுதந்திர வானில் சிறகினை விரிக்கும்
சுந்தர விழியாள் உள்ளமும் பறவையாய்
ஆசைகள் அசைந்து இறக்கையை உசுப்பும்
ஆகாசம் சிறகுக்குள் அடைக்கலம் தேடும்
எல்லையும் இன்றியே எண்ணங்கள் தாவும்
வண்ணங்கள் கலவையாய் வாழ்க்கையே உலகும்
திசைகளின் மேனியில் தவழ்ந்தே உலவும்
கன்னியின் மனமொரு ஆகாசப் பறவை
ஆஸாத் கமால்
இலங்கை.