சின்னஞ்சிறு கிளியே செந்நாட்டு மாமயிலே சிங்காரி உன்னழகில் செந்தேனு பாயுதடி சிங்காரன் கண்ணிரண்டும் வண்டாகி மேயுதடி பத்துமுழ பட்டுத்தி இடுப்பிலே நீ கட்டிவந்து ஏலேலோ பாடயிலே மொட்டுமல்லி என்மனசு மொட்டுவிட்டு மலருதடி சிட்டுக்குருவி என்னிதயம் சிறகடித்து பறக்குதடி சிட்டுமேனி சிறகடிக்க பட்டுமேனி் பளபளக்க பாவாடை தோகைவிரிய பூவாடை மணம் பரப்ப புதுராகம் பூக்குதடி பூங்கோதை உன்னழகில்
காதல்
மானாட மயிலாட
மானாட மயிலாட நானாட நீயாட பாவாடை பறந்தாட பூவாடை மணந்தோட வந்தாளே மகராசி மீனாட்டம் முகராசி தந்தாளே சுகம் நூறு பாவாடை தாவணியில் பூவாடை குமரியவள் பாலாடை பருவம் கொண்டு தேனாடை பூவில் நின்று தருகின்றாள் சுகம் கோட
இதழ்க்காட்டு தேனருவி
இளம்சிரிப்பில் வழியுதடி இதழ்க் காட்டு தேனருவி எழில்காடு உன்னழகில் ஏழுலகும் மயங்குதடி இளம்சிவப்பு செண்பகமே ஈர்க்குச்சி மோகமே கருவிழியில் வேலேந்தி கனித்தமிழில் சொல்காட்டி செந்தமிழன் தனை வெல்ல செருவாளிற் பகை வென்று சிங்காரி வாருமடி பின்னிவைச்ச கூந்தலிலே பிச்சிபூ தூங்குதடி கொடிமொட்டு மலரழகு கொட்டுமேள இசையழகோ கோலநிலா பிறைநுதலில் குஞ்சார கண்ணழகோ உருகாட்டி அழைக்கின்றாய் உணர்வோடும் காதலங்கே
சிறைவிழி கொண்ட நங்கை
சிறைவிழி கொண்ட நங்கை சிந்தையில் நுழைந்த மங்கை பூமேகத் தேரை ஓட்டி புன்னகை தேசம் செல்வாள் கற்கண்டு மொழியாள் அன்னம் கவிபாடும் குயிலோ கிள்ளை சதிராடும் நடையை கூட்டும் சந்தனம் மணக்கும் முல்லை அரும்பானக் காதல் அங்கே அசைந்தாடும் கொடியாள் நல்லாள் மந்திரமிட்டற் போல மலர்ந்திடும் பருவ கொங்கை மருதாணி யிட்டக் கையில் மலர்மாலை சூடும் மங்கை அலங்காரத் தேரில் வந்தாள் அன்பான மொழியும் பேசி நிலம்போலப் பொறுமை கொண்ட. நித்திலம் போற்றும் நங்கை சீரான நிலத்தின் […]
செஞ்சாணி தானெடுத்து
செஞ்சாணி தானெடுத்து செந்தரையை மெழுகிவைத்து சிந்தூர கோலமிட்டேன் செந்தூர கண்ணழகா செம்முத்தம் தாருமடா வாசம் வீசும் மல்லிகை யும் குழலினிலே குடியிருக்க! வாடிபட்டி மாமன் புள்ள கொஞ்சும் கிளி நீ இருக்க குலை குலையாய் கனியிரண்டும் கொண்டுவந்து தந்திடவா? பச்சைமஞ்சள் தானரைச்சி படைபடையா தேய்க்கையிலே இச்சை கொஞ்சும் கண்ணழகில் இடை இடையே மேய்வதென்ன? அகில் விறகில் அடுப்பெரித்து அழகு கஞ்சி நான் தருவேன் அழகு முத்தம் தாருமடா ஆசை மச்சான் நீ எனக்கு பொங்கபானை பொங்கிவர பால்வடியும் […]
ஆசை என்னும் நெஞ்சினிலே
ஆசையெனும் நெஞ்சினிலே அன்பென்னும் தீபமதை பூஞ்சிரிப்பால் ஏற்றிடவா பொன்னொளிரும் உன்னழகில் சின்னமணிக் குயிலும் சிங்காரப் பாட்டெக்க தென்றலென தீண்டுதடா தெம்மாங்கு உன் நினைவு பால்வண்ண பருவமதில் பாவாடை தோகைவிரிய வாசமுறும் மல்லிகையும் வாவென்று உனை அழைக்க வந்துதித்த உன்னழகில் வண்ணத்தேர் ஓடுதடா சொக்கிநின்றேன் நின்னழகில் சோலையோரம் மையலுடன் வெட்கத்தில் நானிருக்க விற்புருவம் உனை வளைக்க பார்வையினால் யுத்தமடா பாவை நெஞ்சம் பித்தமடா தோளில் சாய சித்தமடா தொட்டணைப்பாய் தென்னவனே
சிறைவிழி கொண்ட நங்கை
சிறைவிழி கொண்ட நங்கை சிந்தையில் நுழைந்த மங்கை பூமேகத் தேரை ஓட்டி புன்னகை தேசம் செல்வாள் கற்கண்டு மொழியாள் அன்னம் கவிபாடும் குயிலோ கிள்ளை சதிராடும் நடையை கூட்டும் சந்தனம் மணக்கும் முல்லை அரும்பானக் காதல் அங்கே அசைந்தாடும் கொடியாள் நல்லாள் மந்திரமிட்டற் போல மலர்ந்திடும் பருவ கொங்கை மருதாணி யிட்டக் கையில் மலர்மாலை சூடும் மங்கை அலங்காரத் தேரில் வந்தாள் அன்பான மொழியும் பேசி நிலம்போலப் பொறுமை கொண்ட. நித்திலம் போற்றும் நங்கை சீரான நிலத்தின் […]
கவிஞர் செல்வம்
வாசமல்லி கொடியிடையாள்! பச்சரிசிப் பல்லழகி! முந்திரிப்பூ மூக்கழகி! முத்துப்போல் சிரிப்பழகி! பட்டுப்போல் கன்னமவள்! பாட்டுடை மொழியழகி! செந்தமிழ்த் தேன்மொழியாள்! இஞ்சி இடுப்பழகி இலந்தை பழ பேரழகி நெஞ்சை தொட்டு கொஞ்சுமவள் நினைவில் வாழும் மங்கையவள் மரிக்கொழுந்து மயிலணையாள்! முல்லைப்பூ இடையழகும் கருநாக சடையழகும் பொல்லாத ஆசைகளை பொழுதெல்லாம் தூவுமவள்! பொன்வண்டு போலழகி பொங்குநதி கங்கையவள்! அன்ன நடையழகில் அசைந்தாடும் கார்குழலே கண்ணிரண்டும் கொஞ்சுதடி கன்னல் தமிழ் உன்னழகில் காதல் கணைதொடுக்குதடி கன்னித் […]
பாவலர் அருணா செல்வம்
மின்னலே நீ வரும் நேரம்…. . மின்னலே நீ வரும் நேரம் – என் மெய்யிலே உணர்வுகள் மாறும்! இன்னலோ என்றெண்ணத் தோன்றும் – உடன் இல்லையென உள்ளுணர்வு மீறும்! . வெள்ளியை உருக்கிய நதியோ – இராம வில்லினில் வெளிப்பட்ட அம்போ! தள்ளாடும் முதுமையின் சிரிப்போ – மெல்லத் தவழ்ந்திடும் மழலையின் அழகோ! . காலையில் பூத்திட்ட மலரோ – நல் கவிதையில் வழிந்திட்ட கருத்தோ! மாலையில் சூரியக் கதிரோ – என மயங்குதே உன்முகம் […]
புரிந்தால் பிரிவேது
அன்பில் இணைந்த/ ஆருயிர் இதயம்/ இன்பம் தந்திடும்/ ஈடுஇணையில்லா அருட்பெருஞ்செல்வம் உன்னத உணர்வில்/ ஊற்றெடுக்கும் அன்பு/ எண்ணம் சங்கமிக்கிறது/ பிரிவில்லா புரிதலில்/ சரவிபி ரோசிசந்திரா