சிறப்புக் கவிதை

நெல்லென்னும் நிலமங்கை

#நெல்லென்னும்_நிலமங்கை பொங்கலிலே திங்களவள் தங்கத்தில் மஞ்சளவள் ! கலகலக்கும் நெல்மணிகள் கரமசைத்து தானழைக்க! தையலவள் நெஞ்சமதில் தைபாவாய் தானொளிர! வரப்போரம் இடையசைத்து தலையாட்டும் தங்கரதம்! தேன்சுவையாய் நாவினிக்க தென்பொதிகை கொஞ்சுமவள்! வயலோரக் காற்றினிலே வளைந்தாடும் தேரழகே ! வயலெல்லாம் உன்னழகு வாழ்வாதாரம் நீ யெனக்கு ! நெல்மணியே கண்மணியே உளமெங்கும் பொன்மணியே! களிக்கின்ற நெஞ்சமது கார்மேகம் போலழகாம்! சேற்றில் என் விரலாட நாற்றாய் நீ சதிராட! மார்கழிப் பனியுறைய மங்கை மனம் தேனுறைய! தையாயப்பூ் இதழ் விரிக்கும் […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிதை

தேனருவிச் சாரலிலே

தேனருவிச் சாரலிலே தென்னவனே உன் நினைவு! தென்றலென தேடி என்னை தீண்டுகையில்! மலராடும் மேனியெங்கும் மல்லிகை ப்பூ வாசமுற! விழியெங்கும் உன்னழகு வந்துமுத்தங் கொஞ்சிடவே! குசலையிலே மையழகு குற்றாலத்தில் நனைகையிலே! குங்குமமாய் மாமுகமும் குளிர்ந்தாடிச் சிலீர்க்குதடா! கொடிமலரும் பூவிரிய வண்டழகன் தானுறைய.! வடிவழகாய் என்னழகு வானேறி பறக்குதடா! உன்னிதயம் பாய்ந்திடவே ஊரெல்லாம் நீ எனக்கு உறவான தேரழகாம்! தாமரையும் இதழ்விரிய தளிர்கொடியும் தானசைய! தள்ளாடும் என் மனசு தாளகதி சங்கீதமே!!

கவிதை

இதழ்க்காட்டு தேனருவி

இளம்சிரிப்பில் வழியுதடி இதழ்க் காட்டு தேனருவி எழில்காடு உன்னழகில் ஏழுலகும் மயங்குதடி இளம்சிவப்பு செண்பகமே ஈர்க்குச்சி மோகமே கருவிழியில் வேலேந்தி கனித்தமிழில் சொல்காட்டி செந்தமிழன் தனை வெல்ல செருவாளிற் பகை வென்று சிங்காரி வாருமடி பின்னிவைச்ச கூந்தலிலே பிச்சிபூ தூங்குதடி கொடிமொட்டு மலரழகு கொட்டுமேள இசையழகோ கோலநிலா பிறைநுதலில் குஞ்சார கண்ணழகோ உருகாட்டி அழைக்கின்றாய் உணர்வோடும் காதலங்கே

கவிதை

மானாட மயிலாட

மானாட மயிலாட நானாட நீயாட பாவாடை பறந்தாட பூவாடை மணந்தோட வந்தாளே மகராசி மீனாட்டம் முகராசி தந்தாளே சுகம் நூறு பாவாடை தாவணியில் பூவாடை குமரியவள் பாலாடை பருவம் கொண்டு தேனாடை பூவில் நின்று தருகின்றாள் சுகம் கோடி

சமுதாய கவிதை

பாலையிலே

பாலையிலே பட்டமரம் துளிர்ப்பதேது சோலையிலே இட்டமரம் வாழ்வதேது ஓட்டை பானையிலும் நீர் இருந்து நிலைப்பதேது ஓட்டை மண்டைகளில் அறிவிருந்தும் சிறப்பதென்ன? மானமில்லா மானிடரே நீ இருந்து நன்மை ஏது? காலத்தால் வாழ்வதுவும் மண்ணில் தானோ?

சமுதாய கவிதை

உன் கண்ணில் நீர்வழிந்தால்

உன் கண்ணில் நீர்வழிந்தால் கண்ணம்மா என் கண்ணில் உதிரமடி என் கண்ணின் பாவையன்றோ என்னுயிர் நின்னதன்றோ கண்ணம்மா காலங்கள் போகுதடி கண்ணியம் வேகுதடி சுதந்தரம் அந்தரத்தில் சுகம்தர மறுக்குதடி கண்ணம்மா வேதனைக் காலமடி வேதியன் தொல்லையடி பகுத்தறிவு நோகுதடி பாவிகள் நாட்டினிலே கண்ணம்மா பகலும் இரவும் இல்லை புகலும் வாழ்வுமில்லை அடுத்தவர் உணர்வினிலே அவரவர் திரியுதடி கண்ணம்மா வறுமையும் நாட்டினிலே வரங்ளை கொடுக்குதடி மண்னேறி வந்த விதி மனிதத்தை மிதுக்குதடி மண்னையும் வெறுக்குதடி விண்ணையும் துறக்குதடி கண்ணம்மா […]

சமுதாய கவிதை

உன் கண்ணில் நீர்வழிந்தால்

வண்ணம் கொஞ்சும் வடிவழகி எண்ணம் போற்றும் தமியழகி மண்ணும் விண்ணும் உன்னிடமே கனியின் சுவையாய் இனிப்பவளே கிண்ணம் பொங்கும் தேனழகே எந்நொடியும் நான் மறவேன் பந்தம்போல நீ என்னுயிரே வல்லமைத் தாராய் இவ்வுலகில் வாழ்வதனை வென்றிடவே நல்லுகம் போற்றுமவள் நான்மறையின் நல்லழகே பட்டதுன்பம் பறந்தோடிடவே பாடிடவா உன்னழகை குத்துவார்கள் முதுகினிலே கூனாது என்னிதயம் பண்புடையார் தன்னருகில் பக்கபல மாயிக்க முதுகில் குத்தும் வீணர்களை முகம் திருப்பேன் உன்னழகால் எண்ணத்தில் நீ யெனக்கு ஏழுலக ஒளிவிளக்கு கள்ளமற்ற உள்ளமுடன் […]

சிறப்புக் கவிதை

கார்மேகம் திரண்டெழுந்து

கார்மேகம் திரண்டெழுந்து கடலலையை முத்தமிட செங்கதிரோன் திரண்டெழுந்து செம்பவள இதழ் திறக்க பூப்பெய்தப் புதுமலராய் பூமகளும் நாணினவே பூந்தென்றல் தானும் வந்து புத்தமுத மழைபொழிய கருவண்டு கண்ணழகி கருத்தோடு கோலமிட்டு செருந்தேனை முகத்திலிட்டு செந்தாமரை புன்னகையில் மொத்தமாய் ஏற்றி வைத்தாள் வல்லாளர் வகுத்த வழி தீபஒளி சித்திரமாய்

கவிதை

பட்டாசு பேச்சழகி

பட்டாசு பேச்சழகி பச்சரிசி பல்லழகி மீனாடும் கண்ணழகி மானாடும் நடையழகி முத்தமிழ்ப் பேரழகி மோகனச் சிரிப்பழகி ! கண்ணாடி மேனியளாம் காந்தக் கண்ணழகி ! செந்தூர வடிவழகி செம்பவளச் சிலையழகி கன்னல் கனியழகி கார்மேக குழலழகி ! வளைகரம் குலுங்குமவள் விற்புருவத் தேரழகி காட்டோர மல்லிகையாய் கண்ணோர மணத்தழகி முல்லைமலர் பிறைநுதலாய் வான்நிலவு வட்டமடி கான்மயிலும் ஆடுதடி காரழகு நல்லழகே தேன்நிலவு தேடுதடி தேவதையுன் தேரழகில்

சிறுவர் பாடல்

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ நீராரும் கடலுடுத்த நிலமடதை சித்திரமே காராரும் வதனமென கற்பகமே கரிக்குழலே ஓசைமலர் முகத்தழகே ஆசைமலர் சித்திரமே என் கண்ணே இன்னமுதே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ சின்னமலர் கையசைய சிரிக்கின்ற சிங்காரமே வண்ணமலர் உன்னழகில் வஞ்சி நெஞ்சம் வாசமடி உள்ளம் தந்த ஓவியமடி உயிரில் நின்ற கிள்ளையடி என்னுயிரே எழில் நிலவே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோஆராரோ […]