அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல் வட்டம் பகல் மழை. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும் அட்டை கொழுத்துப்போய் […]