பாலையிலே பட்டமரம் துளிர்ப்பதேது சோலையிலே இட்டமரம் வாழ்வதேது ஓட்டை பானையிலும் நீர் இருந்து நிலைப்பதேது ஓட்டை மண்டைகளில் அறிவிருந்தும் சிறப்பதென்ன? மானமில்லா மானிடரே நீ இருந்து நன்மை ஏது? காலத்தால் வாழ்வதுவும் மண்ணில் தானோ?
சமுதாய கவிதை
உன் கண்ணில் நீர்வழிந்தால்
உன் கண்ணில் நீர்வழிந்தால் கண்ணம்மா என் கண்ணில் உதிரமடி என் கண்ணின் பாவையன்றோ என்னுயிர் நின்னதன்றோ கண்ணம்மா காலங்கள் போகுதடி கண்ணியம் வேகுதடி சுதந்தரம் அந்தரத்தில் சுகம்தர மறுக்குதடி கண்ணம்மா வேதனைக் காலமடி வேதியன் தொல்லையடி பகுத்தறிவு நோகுதடி பாவிகள் நாட்டினிலே கண்ணம்மா பகலும் இரவும் இல்லை புகலும் வாழ்வுமில்லை அடுத்தவர் உணர்வினிலே அவரவர் திரியுதடி கண்ணம்மா வறுமையும் நாட்டினிலே வரங்ளை கொடுக்குதடி மண்னேறி வந்த விதி மனிதத்தை மிதுக்குதடி மண்னையும் வெறுக்குதடி விண்ணையும் துறக்குதடி கண்ணம்மா […]
உன் கண்ணில் நீர்வழிந்தால்
வண்ணம் கொஞ்சும் வடிவழகி எண்ணம் போற்றும் தமியழகி மண்ணும் விண்ணும் உன்னிடமே கனியின் சுவையாய் இனிப்பவளே கிண்ணம் பொங்கும் தேனழகே எந்நொடியும் நான் மறவேன் பந்தம்போல நீ என்னுயிரே வல்லமைத் தாராய் இவ்வுலகில் வாழ்வதனை வென்றிடவே நல்லுகம் போற்றுமவள் நான்மறையின் நல்லழகே பட்டதுன்பம் பறந்தோடிடவே பாடிடவா உன்னழகை குத்துவார்கள் முதுகினிலே கூனாது என்னிதயம் பண்புடையார் தன்னருகில் பக்கபல மாயிக்க முதுகில் குத்தும் வீணர்களை முகம் திருப்பேன் உன்னழகால் எண்ணத்தில் நீ யெனக்கு ஏழுலக ஒளிவிளக்கு கள்ளமற்ற உள்ளமுடன் […]
கவிஞர் மு. சாகீர் உசேன்
மனிதா! உலகம் உனக்கும் எனக்கும் சொந்தமல்ல கடக்கும் காலமும் நெருங்கும் நிற்காது அகண்ட அகிலத்தில் சுருங்கியது இதயங்கள் நீ நினைக்கும்படி வாழ ஆள நினைக்கலாம் எல்லோருக்கும் பொருந்தாது வருந்தாமல் வாழ்பவனை கண்டதுண்டா? திருந்தாமல் வாழ்ந்தவனும் திருந்துவான் ஒருநாளில் பதவியும் பட்டமும் பணமும் பொருளும் உன்னோடு துணைவராது உதவியும் இரக்கமும் இல்லாது போனால் எதுவும் பயன்பெறாது காலமும் நேரமும் கரைந்து கொண்டுதான் இருக்கும் நீயும் எதுவும் கிடைக்க வில்லையென அலைந்து கொண்டுதான் இருப்பாய் ஆனால் உனக்கு கிடைப்பது மட்டுமே […]
கவிஞர் நிரஞ்சலா நிரா நெதர்லாந்து
கவிஞர் நிரஞ்சலா நிரா நெதர்லாந்து அள்ளிட முடியாத ஆசைகள் நீள கண்களில் கனவுக் காட்சியும் திரைவிலக இளமைக் கோலங்கள் ஓவியமாய் நிலைத்திட விண்தொட்ட நினைவுகள் நெஞ்சிலே துள்ளுதே தொலைத்த இனிமைகள் நிறைவேறாத உரிமைகள் மண்ணின் கொள்கைகள் மகத்தான கோரிக்கைகள் உயிரான சொந்தங்கள் உறவின் உன்னதங்கள் நீண்ட பயணமாய் வான்தொட்ட நிலையானதே நன்றி கவிஞர் நிரஞ்சலா நிரா,நெதர்லாந்து
கு. கமலசரஸ்வதி
கமலசரஸ்வதி கு ============== தீக்குள் விரலை வைத்தால்…================ ஞானப் பெருவெளியிலோர் மோனத் தவமிருத்தல் காணும் காட்சியெல்லாம் அன்பின் வடிவதாய், மோன நிலையிலோர் ஞானத்தெளிவு வரும், தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! கண்ணோக்கி விழியசைவில் கதைபல பேசியே ! பின்னோக்கிக் காலமறியாப் பித்தென்ற காதலிலே ! உள்ளார்ந்த உணர்வினிலே உன்மத்தம் பிறந்துவரும், தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! தன் குருதி தாங்கிவளர் கருவாக, மண்மீது குழந்தை எனப் பிறக்கையிலே, எண்ணமெல்லாம் இன்பமதே பரவி நிற்கும், தீக்குள் […]
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
கவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு =================================நானும் என் தம்பியும்…………………………….. அவனுக்கும் எனக்கும் ஒருவயதுதான்வித்தியாசம் அம்மா வேலைக்குபோயிடும் போகும்போது தம்பிய பத்திரமாப்பாத்துக்கன்னு சொல்லிட்டு மத்தியானத்துக்கு சமைச்சிவைச்சிட்டுப்போயிடும் அப்புறம் எங்க ஆட்டம்தான் வீடு ரெண்டாயிடும் அவன் எனக்கும் நான் அவனுக்கும் மாத்திமாத்திக் குளுப்பாட்டி விளையாடுவோம் ஒருதடவை அஞ்சுகிலோகோதுமைமாவு இன்னொருதடவை இரண்டுலிட்டர் நல்லெண்ணை ஒருவாளி அரிசிமாவு அம்மா வந்துபாத்துட்டு அடி என்னைச்சாத்துவாங்க அலறுவேன் அடுத்து தம்பிய அடிப்பாங்கன்னு ஆவலாக்காத்திருப்பேன் அவனை உச்சிமோர்ந்து கொஞ்சுவாங்க என் செல்லம் புஜ்ஜின்னு எனக்குக்கோபம் கோபமா வரும் அம்மா […]
கவிஞர் .சுப்புலட்சுமி ஆறுமுகம் பாபநாசம்
ஆன்மீகம் ஆன்றோரின் அமுதமொழிகளை அள்ளித்தருவது .ஆன்மீகம் அன்பைபோதிக்கும் ஆற்றல்மிக்கது அறிவைப்பெருக்கும் அருளமுதம் தெரிந்துநடந்தால் தெளிவுபெறலாம் அறிந்துபுகழும் பெற்றிடலாம் நம்மை,உலகை இயக்கிடும்சக்தி இம்மையில்நன்மை தந்திடும்உண்மை முன்னேசெய்தவினை விலகிவிடும் உன்னைஉயர்த்திடும் நல்வேதமிது பொருள் புரிந்து நாமும் போற்றிடுவோம் இன்னருள்பெற்று நலம் பெறுவோம்.. கவிஞர் .சுப்புலட்சுமி ஆறுமுகம் பாபநாசம்
மீரான் இப்றாகீம்
சாதனை உடலால் அறிவால் வியப்பில் ஆழ்த்தும் மற்றோரால் முடியாமல் செய்து காட்டும் விடாது முயற்சியினால் வினோதமாய் மாற்றும் அயராது உழைத்து அதிசயமாய் மாற்றும் பலமுறை சறுக்கி மலையின் உச்சிலேறும் பழையது புதியதாக மாற்றிப் படிப்பினையாக்கும் ஆக்கம் ஊக்கம் அதிசய சிந்தனை யாரிடம் உள்ளதோ அதுவே சாதனையே…
வ.பரிமளாதேவி
வீரமகள் ++++++++ கருவில் இருக்கையில் கதை கேட்டிருப்பாயோ / புறநானூற்றுப் போர்வீரர் புகழ் படித்தாயோ / புயலாய் எழுந்து பரணி பாடுகிறாய் / பெரும்பாறை பிடித்து சிறுதூண் என்கிறாய் / பெருங்ககடல் தாண்டி வாய்க்கால் என்கிறாய்/ ஒற்றைக் காலில் உலகை அளக்கிறாய் / சிறுகரம் அசைவில் சிறகடிப்புச் செய்கிறாய்/ பயமறியாப் பாவையே பூமியே புகழுமடி/