கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

கடுதாசி

*கடுதாசி* நடுநிசி நேரத்துல நானுந்தான் உறங்கல கடுதாசி வரும்வரை கதவையும் திறக்கல என்னெஞ்செ புரிஞ்சவரே எழுதுங்கக் கடுதாசி மின்னஞ்சல் வேணாங்க மின்னலாய் மறைஞ்சுடுமே வாசக் கதவை மூடிவிட்டு வாசிப்பேன் உன் கடுதாசி நேசக் கதவை திறந்துவச்சு நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு மண்ணுக்குள் உழுதாக்கி மறைச்சு வச்ச விழுதாக்கி எண்ணத்தை எருவாக்கி என்னையே கருவாக்கி கடுதாசி பூ தந்தாய் காகிதப் பூ ஆனாலும் தொடுநேசிப்பு உணர்ந்தேனே தொடரும் மன வாசனையில்.. கண்ணுக்குள் வாழுமென் கண்ணான மச்சானே பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள பொக்கிசமாய் […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

திருக்குறள் தேசிய நூலாகுக

*திருக்குறள் தேசிய நூலாகுக* ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே! அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து .. செய்கின்ற நம்வாழ்க்கை […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

குழந்தைகள்

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையில் நீ பெற்றக் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன் கேட்கும் விஞ்சும் பட்டு மேனியைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கெஞ்சும் மலர்த்தோட்டம்! ப்ரசவத்தில் கதறினாள் உன் தாய் நீ பிறந்ததும் அவள்மீது பட்ட உன் […]

கவிஞர் கணபதிசுவாமிக் குரு சுதர்சனக்குரு கவிஞர் பக்கம்

திருக்குறள் தேசிய நூலாகுக

*திருக்குறள் தேசிய நூலாகுக* ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே! அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து .. செய்கின்ற நம்வாழ்க்கை […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

வாழ்க்கை

*வாழ்க்கை* வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு ………..வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு ……….. வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு ……….சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை! ……….கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப் ……..பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம் சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ …….சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல ……விவேகத்தைப் […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

தமிழாய்த் தமிழுக்காய்……

*தமிழாய்த் தமிழுக்காய்….* தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்து அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில் மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து பிழையின்றி வாழப் பழகு. சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய் வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர் வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய் இழியும் பழியும் இழுக்கு. ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி விழுப்புண் விழைந்திட வாழ்வாய்த் தமிழுக்காய் வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி சூழும் புகழ்ச்சிச் சுழல் மொழியை அழித்தல்; முழியை மழித்தல் விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய் […]

கவிஞர் பக்கம்

வஞ்சக நெஞ்சகம்

இனிதாகப் பேசி இயல்பாய் நடித்து நுனிநாக்கில் தேனை நுழைத்து __ மனத்தினில் முன்பே கசடுகளை மூடுதல் கண்டவர் அன்பை யொழிப்பா யகத்து _கவியன்பன் கலாம்

கவிஞர் கவியன்பன் கலாம் கவிதை

தேனருவிச் சாரலிலே

தேனருவிச் சாரலிலே தென்னவனே உன் நினைவு! தென்றலென தேடி என்னை தீண்டுகையில்! மலராடும் மேனியெங்கும் மல்லிகை ப்பூ வாசமுற! விழியெங்கும் உன்னழகு வந்துமுத்தங் கொஞ்சிடவே! குசலையிலே மையழகு குற்றாலத்தில் நனைகையிலே! குங்குமமாய் மாமுகமும் குளிர்ந்தாடிச் சிலீர்க்குதடா! கொடிமலரும் பூவிரிய வண்டழகன் தானுறைய.! வடிவழகாய் என்னழகு வானேறி பறக்குதடா! உன்னிதயம் பாய்ந்திடவே ஊரெல்லாம் நீ எனக்கு உறவான தேரழகாம்! தாமரையும் இதழ்விரிய தளிர்கொடியும் தானசைய! தள்ளாடும் என் மனசு தாளகதி சங்கீதமே!!

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

புன்னகை

”புன்னகை” இதயக் கண்களைக் கூச வைக்கும் ன்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம் சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம் விலைமதிப்பில்லா வைரம் வையகத்தை வசப்படுத்தும் வசீகரம் செலவில்லா தர்மம் அசையும் ஈரிதழ்கள் இசையாய் ஊடுருவி அசைக்க வைக்கும் விசையில்லாக் கருவி வன்பகை விரட்டும் சக்தி புன்னகை என்னும் […]

கவிஞர் கவியன்பன் கலாம் கவிஞர் பக்கம்

கவிதைக் களம்

*தலைப்பு* : *கவிதைக் களம்* ============================ எழுத்தெனும் நிலத்தில் எண்ண விதைகள் அழுத்தமாய்ப் பதிய அமைந்த களமிது வாளென விளங்கும் வசன வீச்சில் ஆளுமை கொண்டு ஆர்த்தெழும் களமிது காதலும் வீரமும் கவிதைச் சொற்களில் சாதனை புரிய தக்கதோர் களமிது வள்ளுவர் கம்பர் வசித்த இடமிது அள்ளித் தந்த அருங்கவிக் களமிது நீதி போதனை நிலைக்கும் தளமிது ஆதிச் சுவடிகள் அழியாக் களமிது சித்தரும் ஆன்மா சிலிர்த்திட கவனமாய் நித்தமும் கவிமரம் நிறுவிய சுவனமாய்ச் சிந்தனை மலர்கள் […]