சத்துணவு

இர.தர்மாம்பாள்

காதலி…**********செல்லமாய் சிணுங்கி வெல்லமாய் இனிப்பாள்/வேதியியல் மாற்றங்களை வேகமாய் வளர்ப்பாள்/சாதிசமய பேதங்களைச் சந்தடியின்றி களைவாள்/வேதத்தினும் இனிதாகக் காதல்மொழி சொல்வாள்/ நொடிதோறும் அவள்நினைவை உள்ளத்தில் விதைப்பாள்/செடிபோன்று செழித்தோங்க மாயங்கள் புரிவாள்/வற்றாத ஊற்றாக இன்பமள்ளித் தருவாள்/முற்றாத மலராக முழுநாளும் மணப்பாள்…/

சத்துணவு

பொற்கேணி முளப்ஃபர்

சாதனை* * * * * *துயரங்கள் எத்தனை துரத்தியே வந்தாலும்/பயந்தனை மறந்து பயணத்தைத் தொடர்ந்து/உயர்ந்திட விளைந்து ஊக்கத்தில் திளைத்து/அயராமல் முன்னேகி அடைவதே சாதனன/ வேதனையில் தீயாகி வெந்து நீறாகி/சோதனையில் நின்று சோகங்கள் வென்று/போதனைகள் பெற்று புடமிடக் கற்று/ஆதனமாய்க் கொள்ளு அதுவே சாதனை/ பொற்கேணி முளப்ஃபர்

சத்துணவு

பொ.முத்துராக்கு

சாதனை செய்திட பயிற்சியும் முயற்சியும்! சலியா துழைத்துத் தோல்விகள் பொறுத்துச்! சாதிக்கும் எண்ணம் மனதில் நிறுத்தி! சத்திய நெறியை வழியாய்க் கொண்டே! எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும்! எழுவேன் உயர்வேன் எல்கை வெல்வேன்! என்றே துணிந்து உழைத்திட வெற்றியே! ஏட்டில் சாதனைச் சரித்திரம் பதிக்கலாம்!

சத்துணவு

ப.வீரக்குமார்

சாதனை −−−−−−−− சந்திக்கும் தோல்விக்குத் தரும் தோல்வி// சோதனை வரும் போது வருந்தாமல்// சாதிக்கத் துடிப்பதே தன் நம்பிக்கை// அதுமட்டுமே! அகிலத்தை வென்றேனெனச் சொல்ல…. −−−

சத்துணவு

ன் சங்கரலிங்கம்

கரணம் தப்பினால் மரணம் உண்டு வயசு பொண்ணுக்கு சாதனை வேண்டும் அச்சமின்றி உயரத்தில் அனாயாசமாக தொங்கி வித்தை காட்டும் வித்தியாசமான மனநிலை சாதிக்க முடியும் சன்மானம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்பு அளிப்போம். க.ச.சந்திரசேகர

சத்துணவு

நிரஞ்சலா நிரா

சாதனை நெஞ்சில் உரமும் கொள்கையில் திடமும்/ வஞ்சமில்லா எண்ணமும் வாழ்ந்துகாட்ட எழுந்திடு/ தோல்வியில் துவளாது விழுந்தாலும் எழுந்திடு/ கனவுகளை நனவாக்க காரியத்தில் கண்ணாக/ அயராத உழைப்பாய் நம்பிக்கையை கைப்பற்றி/ தொடர் போராட்டமாய் தொடர்ந்திடு பயணமதை/ அச்சத்தை விலக்கியே வீரத்தை அணைத்து/ வேங்கையாய் பாய்ந்திடு வெற்றியில் களித்திடு/ நன்றி

சத்துணவு

உடுமலை ராமர்

காதல் மேகமே =============== ஓசையின்றிப் பதுங்கும் காதல் மேகமே / ஆசையின்றிப் போகுமோ ஒதுங்கிப் போகிறாய் / இடியும் மின்னலும் எழுத்தாணியாய் எடுத்து / மழையை மையாக்கி மண்ணுலகை மயக்கிவிடு /

சத்துணவு

வேங்கடலட்சுமி ராமர்

காதல் மேகமே கண்கள் கலந்தன இதமாய்த் தழுவின / ஒன்றை ஒன்று ஈர்க்கும் விசையுடன் / காந்தப் பார்வைகள் காதலில் மூழ்கின / காதல் மேகமே ! கலைந்திடாதே வேகமே /

சத்துணவு

பாவலர் தண்முகநம்பி

காதல் மேகமே களைந்து செல்வதேன் கண்ணில் மின்னலாய் வந்து போவதேன்! கூதல் காற்றிலே கொஞ்சி சிரிப்பதேன் கொட்டும் மழையிலே கூடிக் களிப்பதேன்!