கவிஞர் நிரஞ்சலா நிரா நெதர்லாந்து
அள்ளிட முடியாத
ஆசைகள் நீள
கண்களில் கனவுக்
காட்சியும் திரைவிலக
இளமைக் கோலங்கள்
ஓவியமாய் நிலைத்திட
விண்தொட்ட நினைவுகள்
நெஞ்சிலே துள்ளுதே
தொலைத்த இனிமைகள்
நிறைவேறாத உரிமைகள்
மண்ணின் கொள்கைகள்
மகத்தான கோரிக்கைகள்
உயிரான சொந்தங்கள்
உறவின் உன்னதங்கள்
நீண்ட பயணமாய்
வான்தொட்ட நிலையானதே
நன்றி
கவிஞர் நிரஞ்சலா நிரா,நெதர்லாந்து