வாழ்த்துக்கள்

மஹா பர்வீன்

கோழிக்கு மயிர பிடுங்கி வாட்டியெடுத்து பித்தெடுத்து தூர வீசி மஞ்சளப் பூசி அழகுப் பார்த்து…. கொத்தமல்லி சீரகம் பெருஞ்சீரகம்னு ஒப்புக்கு மிளகெடுத்து ஓரமா வரமிளகாய வாட்டி… எத்தன தலைமுறைய கண்டதோ குழவி தேஞ்சாலும் கொத்த கொத்த சம்மனம் போட்டு கெடக்குற அம்மியில… அர முடி தேங்காய நறுக்கா நசுங்க அரச்சு செக்கு எண்ணெயெடுத்து சிறுக நெருப்பு மூட்டி கொதிக்க கொதிக்க ஆவி பறக்க இறக்கி… வாழை இலையில சோத்தக் கொட்டி வலதுகால நீட்டி இடக்காலுல குத்த வச்சு…. […]