#நெல்லென்னும்_நிலமங்கை
பொங்கலிலே திங்களவள்
தங்கத்தில் மஞ்சளவள் ! கலகலக்கும் நெல்மணிகள்
கரமசைத்து தானழைக்க!
தையலவள் நெஞ்சமதில்
தைபாவாய் தானொளிர!
வரப்போரம் இடையசைத்து
தலையாட்டும் தங்கரதம்!
தேன்சுவையாய் நாவினிக்க
தென்பொதிகை கொஞ்சுமவள்!
வயலோரக் காற்றினிலே
வளைந்தாடும் தேரழகே !
வயலெல்லாம் உன்னழகு வாழ்வாதாரம் நீ யெனக்கு !
நெல்மணியே கண்மணியே
உளமெங்கும் பொன்மணியே!
களிக்கின்ற நெஞ்சமது
கார்மேகம் போலழகாம்!
சேற்றில் என் விரலாட
நாற்றாய் நீ சதிராட!
மார்கழிப் பனியுறைய
மங்கை மனம் தேனுறைய!
தையாயப்பூ் இதழ் விரிக்கும்
தைபாவாய் சித்திரமே!
கோமாதா நெஞ்சொழுகும்
கோலக்கொடி முத்தாரமே!
நீ இல்லா வாழ்வெனக்கு
நீரில்லா உலகமடி!