கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் அனுராஜ்
***************************************************************
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வசித்துவரும் கவிஞர் அனுராஜ் வணிகவியல் பட்டதாரி. எளிமையான தோற்றமுடையவர்.
இவரது ஹைக்கூ கவிதைகள் நாளேடுகள், மாத வார இதழ்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன.
ஹைக்கூ தொகுப்பு நூல்கள் பலவற்றில் இவரது ஹைக்கூ கவிதைகள் முத்திரைப்பதித்துள்ளன.
ஹைக்கூ ஓர் அறிமுகம் எனும் வரிசையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வழி சிறந்த ஹைக்கூக்களை அடையாளம் காண்பித்து வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் சிறப்பான செய்தி . இவரது ஹைக்கூ குறித்த ஆய்வுக்கட்டுரைகளை பிரான்சு நாட்டிலிருந்து வெளிவரும் மின்னிதழ் ” தமிழ் நெஞ்சம் ” வெளியிட்டு வருகிறது.
பல முகநூல் குழுமங்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் இவர், பல்வேறு விருதுகளைப்பெற்று சிறப்பிடத்தில் உள்ளார்.
இவரது ஹைக்கூக்களில் யதார்த்தமான நிகழ்வுகளை படம் பிடித்துக் காண்பிக்கும் சிறப்பு உள்ளது. சென்றியு வகைமையும் இவரது ஹைக்கூ கவிதைகளில் காணலாம். இங்கே இவரது சில ஹைக்கூ கவிதைகளை பதிவதில் மகிழ்கிறோம்.
உலகத்தமிழ் ஹைக்கூ கவிதைகள் மன்றத்தின் நிர்வாகிகளும் ஒருவரான கவிஞர் அனுராஜ் மேலும் பல உயரங்களைத் தொட இனிதே வாழ்த்துகிறோம்.
….கா.ந.கல்யாணசுந்தரம்
மற்றும் நிர்வாகிகள்
உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்
கவிஞர் அனுராஜ் அவர்களின் முகவரி :
கவிஞர் அனுராஜ்
34, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தெரு,
தென்றல் நகர்
போடிநாயக்கனூர் – 625513
தேனி மாவட்டம்
கைப்பேசி: 9942103576
கவிஞர் அனுராஜ் அவர்களின் ஹைக்கூக்கள்…..
- உதிர்ந்த சருகு
பறக்கத் தலைப்பட்டது
பட்டாம் பூச்சி
- வீசிய காற்றில்
மெல்லக் கலைகிறது
என் சப்தம்.
- நீரில் வீசிய
தூண்டிலில் சிக்குகிறது
வானவில்.
- மரணவீடு
புகைந்து கொண்டிருந்தது
சொத்து விவகாரம்.
- அனைவரும் துவைத்தாலும்
அழுக்காகிப் போனது
துவைத்த இடம்.
- தாயென நினைத்து
மாராப்பை விலக்கியது
பொம்மை மடியில் குழந்தை.
- திரையரங்கின் நாற்காலி
முழுதும் நிறைந்திருக்கிறது
மூட்டைப் பூச்சிகள்.
- சாதிகள் வேண்டாம்
ஐயோ..அடிக்காதீர்கள்
நான்..உங்க சாதிக்காரன்
- தெருவிற்கு வந்த கடவுள்
சில்லறைச் சேர்க்கிறார்.
ஓவியன்.
- மாற்றுத் திறனாளிப் பெண்
தொடர்ந்து வருகிறாள்
நெடுநேரம் நினைவில்.
அனுராஜ்..
சிறப்பான பகிர்வு. ஹைக்கூ கவிஞர்களுக்கு தங்களது தளத்தில் பதிவுகலை அளித்து சிறப்பித்தது அருமை. நன்றியுடன்…கா.ந.கல்யாணசுந்தரம்
நன்றி அண்ணா…………….. வணக்கம்
சிறப்பு.
நன்றி சகோ வணக்கம்