கவிதை சமுதாய கவிதை

கு. கமலசரஸ்வதி

கமலசரஸ்வதி கு ============== தீக்குள் விரலை வைத்தால்…================ ஞானப் பெருவெளியிலோர் மோனத் தவமிருத்தல் காணும் காட்சியெல்லாம் அன்பின் வடிவதாய், மோன நிலையிலோர் ஞானத்தெளிவு வரும், தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! கண்ணோக்கி விழியசைவில் கதைபல பேசியே ! பின்னோக்கிக் காலமறியாப் பித்தென்ற காதலிலே ! உள்ளார்ந்த உணர்வினிலே உன்மத்தம் பிறந்துவரும், தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! தன் குருதி தாங்கிவளர் கருவாக, மண்மீது குழந்தை எனப் பிறக்கையிலே, எண்ணமெல்லாம் இன்பமதே பரவி நிற்கும், தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! காத்திருந்த பல நாட்கள், வீணில் கடந்து போன பின்னாலே, நல்ல வாய்க்கும் வேலை ஒன்றினாலே, மனமுணரும் தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! நல்வாழ்க்கை நலமுடனே நகர்ந்து செல்ல, நடுவினிலே வரும் ஓர் விபத்தெனவே, உயிர்வாழும் நாட்களெண்ணும் நிலைவரின், மனங்கொள்ளும் தீக்குள் விரல்வைத்தேத் தீண்டுதல் போல்… ! – கு. கமலசரஸ்வதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *