பிறப்பின் மகத்துவம் கண்ட மலரே மனிதரிடம் கசங்காது கால்களில் மிதிபடாது பிறப்பின் தத்துவம் உணர்ந்த மலரே இறைவனிடம் சரணடைந்த மலரே மகிழ்வாய் கிருஷ்ணபிள்ளை சிவராமன்
−−−−−−−−−−−−−−− கண்களில் பூத்தது, காவியம் ஆனது// அவள் சீதையோ, இல்லை ராதையோ// காதலில் விழுந்து , கனவுகள் தொடர்ந்து// கலையாய் ஆடும் மலரே மகிழ்வாயா!.. −−− ப.வீரக்குமார்
என் ஆரூயிர் அம்மா:கவிஞர் சரவிபி ரோசிசந்திரா ********************** அம்மா நீயில்லை என்றால் அகிலம் இல்லை அம்மா அம்மா நீயில்லை என்றால் அன்பும் இல்லை அம்மா ஆரூயிர் பெற்றேன் உன்னால் அம்மா ஆண்டவனைப் பார்த்தேன் உன்னில் அம்மா அம்மா நீயில்லை என்றால் நானிங்கு இல்லை அம்மா கருவறையில் இடம் தந்து அங்கமெல்லாம் நீ சிதைத்து நித்தமும் என்னை நினைத்து நித்திரை எனக்காய் தொலைத்து நீ சுமந்த வலிக்கு மருந்துகளில்லை மருத்துவம் பார்க்க மருத்துவரில்லை அம்மா நீயில்லை என்றால் நானிங்கு […]