இனிப்பு கவிஞர்கள் கவிதை

வ.பரிமளாதேவி

நிலவே காதலி +++++++++++++ நீலவானில் வெண்ணரசி நீயே விண்ணரசி/ விண்மீன் தோழியரோடு கண்ணாமூச்சி ஆடிடுவாய் / மேகக்கூட்டத்தை முட்டி மோதி வெளிவருவாய் / விழிதெரியாக் காட்டிலும் வழித்துணையாய் வந்திடுவாய் / மூன்றாம் பிறையை முதியோரும் வணங்குவர்/ மழலை மருந்தென்பதை விருந்தாக்க உதவுவாய்/ மானுடன் மனமாளும் மங்காத விளக்கே / மாசற்ற நிலவே நீயேயென் காதலி/ வ.பரிமளாதேவி

இனிப்பு கவிதை

சதுருதீன் அல்லாபிச்சை

காதல் மேகமே காரிருள் மேகம் காற்றோடு கலந்துவர / கற்பனையில் ஏங்கும் விவசாயி மகிழ்ந்திட / நாடு செழிக்கும் மழை எங்கே / காதல்மேகமே வந்திடு வாழ்வின் சுகத்திற்கே