ஆயிரம் பூக்கள் யாவும் அடர்மரக் காட்டில் பூக்கும்! அருந்தமிழ்ப் பாக்கள் யாவும் அடர்மனக் கூட்டில் பூக்கும்! தேன்மொழி கடைக்கண் பார்வை தேவியென் மீதே பாயும்! தொடர்ந்திடும் துன்பம் யாவும்! துயர்பறந் தோடும் இன்பம்! தாயினும் சிறந்த நல்லாள்! தாள்களில் சரண்புகு தேன்மொழி தேவி அன்னாள்! கவிஞர் செல்வம் சௌம்யா