சிறுவர் பாடல்

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ நீராரும் கடலுடுத்த நிலமடதை சித்திரமே காராரும் வதனமென கற்பகமே கரிக்குழலே ஓசைமலர் முகத்தழகே ஆசைமலர் சித்திரமே என் கண்ணே இன்னமுதே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ சின்னமலர் கையசைய சிரிக்கின்ற சிங்காரமே வண்ணமலர் உன்னழகில் வஞ்சி நெஞ்சம் வாசமடி உள்ளம் தந்த ஓவியமடி உயிரில் நின்ற கிள்ளையடி என்னுயிரே எழில் நிலவே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோஆராரோ […]

கவிஞர் செல்வம் சௌம்யா சிறுவர் பாடல்

சேலத்து மாம்பழமே

சேலத்து மாம்பழமே செவ்வான முழுமதியே சேயே எந்தன் தென் பொதிகை சந்தனமே தாயன நெஞ்சினிலே தித்திக்கும் தேன் கரும்பே என் கண்ணே கண்வளராய் தாலேலோ தாலேலேலோ தாய் நெஞ்சில் தாலாட்ட என் நெஞ்சில் நீ தேரோட்ட என் தங்கமே சிரிக்கின்ற உன்னழகில் செங்கமலம் பூக்குதடி தாய் நெஞ்சம் அதை கண்டு நெஞ்சமெல்லாம் இனிக்குதடி என் கண்ணே கண்ணுறஙககாய் தாலேலோ தாலேலேலோ உதைக்கின்ற காலுக்குமே ஒரு முத்தம் தந்திடவா சிரிக்கின்ற உன் முகத்தில் முத்தமழை பொழிந்திடவா இனிக்கின்ற உன்னழகில் […]

சிறுவர் பாடல் பைந்தமிழ்ப்பாமணி ஜெனிஅசோக்

🌹🌹சிறுவர் பாடல்🌹🌹

(எழுசீர் விருத்தம்) பாடுவோம் வாரீர் பாலகர் கூடிப் பலகதை கூறுவோம் நாமே ஆடுவோம் வாரீர் அணியணி யாக அழகிய மயில்களாய் நாமே போடுவோம் தாளம் தகதிமி யெனவே பூக்களாய் மகிழ்ந்திருப் போமே ஓடுவோம் குதிப்போம் மான்களாய் மாறி ஒற்றுமை கொண்டுயர் வோமே – கவிஞர் ஜெனிஅசோக் –