சிறுகவிதை

கலா லோகநாதன்

//வாழ்வாதாரமே // வாழ்வின் ஆதாரம்வளரும் மரந்தானே/ விதையிட்டு வளர்த்தாலேசெழித்திடும் நிலந்தானே/ வயிற்றுக்கும் உணவிடும்விசும்பினையும் வரவழைக்கும் / பிழைத்திடவும் வழிதரும்பாரினையும் காத்திடும் / காட்டினை அழிக்காமல்மரங்களை முறிக்காமல் / மதிகெட்டு வாழாமல்விதிதேடிப் போகாமல் / குறைவற்ற வாழ்வினையேநிறைவாய்ப்பெற்றிடுவோம் / கார்மேக மழையினையேவரமாய்ப்பெற்றிடுவோம்/ ||கலா லோகநாதன் ||

சிறுகவிதை

க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவிநாசி

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா/-எங்கள் அழகுசித்திரமே உந்தன் அமுதுமொழியும் அற்புதமே/ கற்பனையில் வரும் நிலவு போல்முகமோ?/ சொற்களில் சுவைகூடும் நர்த்தனமோ எனக்கு/ மழலையின் குணமெல்லாம் கலை யாகுமே/நினைக்க மனத்திற்குள் எழுந்தோடும் சுகமாகுமே/ தாயணைப்பில் தங்கமாக வரம் வேண்டுமே/ தவமாக கிடைத்தவளை கை தாங்குமே/ க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவிநாசி

கவிஞர்கள் கவிதை சிறுகவிதை

எழுத்தாளர் கே ஜி ஜவஹர்

எனக்குண்டு இங்கே நிறைய காதலிகள் உனக்கென இருப்பேனென்ற வாலிபக் காதலி மனதை கொட்டிவிட்டு சென்றிட்ட காதலி சினம்கொண்டு எனைப் பிரிந்திட்ட காதலி. வாழ்வில் மனைவியென வந்தவளே காதலி வாழ்வில் வழிகாட்டும் மனையாளே காதலி சூழ்கின்ற சிரமத்தைச் சுடும் மனைவி காதலி ஆழ்மனதில் அடிவேராம் இல்லாளே காதலி,!

கவிதை காதல் சிறுகவிதை

ஆஸாத் கமால்

காதலி * இதயத்தின் இயக்கம் அவளே தந்தாள்/ இமைக்கின்ற நொடியில் எனக்குள் கலந்தாள்/ இரவின் மடியில் கனவினை ஈர்ந்தால்/ இன்பத்தின் வடிவாய் வந்தவள் அவள்தான்/ அன்பினால் என்னைப் பிணைத்தவள் அவள்தான்/ கல்லாய்க் கிடந்தேன் உளியால் உடைத்து/ தன்னை எனக்குள் படைத்தவள் அவள்தான்/ தாயிலும் மிகுந்த அவள்தான் காதலி/

கவிதை சிறுகவிதை

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

காதலி மின்னல் போல என்னைக் கடந்து / முன்னால் போன பெண்ணை நினைத்து / பின்னால் எந்தன் கண்கள் இரண்டும் / அழகைக் கண்டு தொடர்ந்தது மிரண்டு ./ பின்னல் கண்டேன் பிரமித்து நின்றேன். / எண்ணம் எல்லாம் அவளே என்றேன். / கன்னக் குழிகள் சிவந்து நின்றாள் / காதல் மனதை தந்து சென்றாள்..