#நெல்லென்னும்_நிலமங்கை பொங்கலிலே திங்களவள் தங்கத்தில் மஞ்சளவள் ! கலகலக்கும் நெல்மணிகள் கரமசைத்து தானழைக்க! தையலவள் நெஞ்சமதில் தைபாவாய் தானொளிர! வரப்போரம் இடையசைத்து தலையாட்டும் தங்கரதம்! தேன்சுவையாய் நாவினிக்க தென்பொதிகை கொஞ்சுமவள்! வயலோரக் காற்றினிலே வளைந்தாடும் தேரழகே ! வயலெல்லாம் உன்னழகு வாழ்வாதாரம் நீ யெனக்கு ! நெல்மணியே கண்மணியே உளமெங்கும் பொன்மணியே! களிக்கின்ற நெஞ்சமது கார்மேகம் போலழகாம்! சேற்றில் என் விரலாட நாற்றாய் நீ சதிராட! மார்கழிப் பனியுறைய மங்கை மனம் தேனுறைய! தையாயப்பூ் இதழ் விரிக்கும் […]
சிறப்புக் கவிதை
கார்மேகம் திரண்டெழுந்து
கார்மேகம் திரண்டெழுந்து கடலலையை முத்தமிட செங்கதிரோன் திரண்டெழுந்து செம்பவள இதழ் திறக்க பூப்பெய்தப் புதுமலராய் பூமகளும் நாணினவே பூந்தென்றல் தானும் வந்து புத்தமுத மழைபொழிய கருவண்டு கண்ணழகி கருத்தோடு கோலமிட்டு செருந்தேனை முகத்திலிட்டு செந்தாமரை புன்னகையில் மொத்தமாய் ஏற்றி வைத்தாள் வல்லாளர் வகுத்த வழி தீபஒளி சித்திரமாய்
சேற்றிலே மிதக்கும் பூவாய்
ஆந்தை போல் விழிக்கும் உன்னால் அடங்காத சிரிப்பை கொண்டேன் சேற்றிலே மிதக்கும் பூவாய் சேல்விழி மிதக்கும் அன்பே விரிந்த வான் நிலாவில் அங்கே விளைந்ததோர் அழகு நீயே திரிந்திடும் காற்றை போல திரிந்திடும் பார்வை உன்னில் தெரிந்ததோர் நாணம் ஒன்று தீண்டுதே மேனியெங்கும் புரியாத உன்றன் பார்வை பூவையின் புதுமை போர்வை அசைவது உன் விழியினோடு அலைவது நெஞ்சம் தேடி கலைவது கனவு எங்கும் காண்பது உன் நினைவில் நன்றாம்
படித்தது காதல்
படித்தது காதல் அங்கே பிடித்தது அத்தான் உள்ளம் துடித்ததோர் நெஞ்சம் யாவும் தொட்டணைத் தானின் மீதே நடித்தது வெக்கத் தோடே நாணத்தால் தரைகீழ் நோக்கி விடிந்தது பொழுதில் அங்கே வேல்விழி நினைவில் யெல்லாம் கொஞ்சிட வருவான் அத்தான் கொடியாள்நல் நங்கை என்னில் உறங்காத உணர்வில் எங்கும் ஒளிதரும் அவனின் நெஞ்சம் சோலைக் குளத்தில் பூக்கும் செந்தாமரை முகத்தில் நன்றாம்
இதுவா தீபாவளி
தமிழர்களை அசுரகளாய் ஊளையீட்டார் தரித்திரர்கள் ஆரியர்களே பொய்யினோடே பழந்தமிழர் பண்பாடு மறைக்க வென்றே புனைச்சுருட்டுச் செய்துவந்த ஆரியர் .தாமே தூயதமிழன் ராவணனை அசுரன் என்றார் தூய்மையில்லா மனதினராய் உலகில் நின்றார் நேர்நின்று திறனில்லா ராமன் தானோ புறம் நின்று குத்திட்டால் வீரன் தானாம் தமிழர்களோ தங்கமென உலகில் தோன்ற தமிழர்களை இரும்புக்கு நிகராய் சொன்னார் உயிரினத்தை கொல்லமையை கொண்ட நாட்டில் உயிரினத்தை கொல்வதுதான் விழாவே என்றார் பெண்ணினத்தை கொல்லமையை கொண்ட நல்லோன் நாகமவன் தமிழன்னை செல்ல மல்லன் […]
தமிழ்மொழி கவிதை
அம்பு விடுத்தனையோ கம்பன்கவி மகளே நெஞ்சில் தைத்தனையோ வீசும் பார்வையிலே வம்பாய் வந்தனையோ வீரக் காதலிலே வலைவீசும் பார்வையிலே விலைபேசும் தென்னவளே சுரமெழில் சிந்தையிலே சுகமாகும் தேரழகே வரம் பெற்றேன் உன்னழகில் வளம்பெற்ற நெஞ்சதில் உயர்வான செந்தமிழில் ஊர் பேசும் காதலடி துயர்வந்து சேராத தூயதமிழ் சாரலடி கயலாடும் கண்களிலே காதலடி நீ யெனக்கு புகல்கின்ற வார்த்தைகளும் பூவை உன்னில் தஞ்சமடி பொன்மொழியாய் பகலிரவும் உன்நினைவு மின்னலடி நிகரில்லாப் பேரழகே நித்திலத்தின் தேரழகே நிறைந்தென்றன் இதயமதில் நின்றாடும் […]
தமிழ்மொழி கவிதை
பொங்கும் தமிழியோசை எங்கும் மணியோசை சந்தக் குயிலோசை சங்கத் தமிழோசை முந்துத் தமிழ் கொண்டு மதுரை தமிழ் பாட சிந்தும் தேன் போல சிரிக்கும் மலர் முல்லை வங்கக் கடலோரம் வார்த்தைக்கிளி கிள்ளை நுங்கின் குளிர் போல நகரும் பனி அன்னம் தெங்கின் சுவையோடு தெற்கின் தேன் கிண்ணம் அன்னம் அவள் தானே அசையும் தேரன்னம் பின்னுந் தளை கொண்டு மின்னும் மயிலாளே வண்ணக் கனவெங்கும் வண்ணமயில் அன்னாள் ். விரல் தொட்டால் மலர்வாளே விண்ணில் நிலா […]
கவி. செங்குட்டுவன்
கவி. செங்குட்டுவன் வானமே எல்லை வானத்தையே எல்லையாய் வகுத்துக் கொண்டவர்கள் மானத்தை காத்திட மயக்கம் கொள்ளாதவர்கள் ஊனமே உடலில் உயர்வாய் இருந்தாலும் தானமதை அளிப்பதில் தவறாமல் ஈடுபடுவர்………. வெற்றி என்னும் வேத வாக்கை பற்றிக் கொண்டே பறந்து செல்பவர்கள் மற்ற எதையும் மனதில் கொள்ளாமல் கற்ற வித்தைகளை களத்தில் விதைப்பர்………..
ஆகாசப்பறவை
கவிஞர் நிரஞ்சலா நிரா, நெதர்லாந்து ஆசைகள் விரிய ஆனந்தம் கூத்தாட வண்ணச் சிறகும் வானில் பறக்க மங்கையின் மனதில் கற்பனைக் கோலங்கள் காதலும் கவிபாட காற்றோடு கானமாக நெஞ்சிலே மஞ்சமிட்ட மன்னவன் எண்ணமே பஞ்சென மேகமும் கொஞ்சியே அழைத்திட துள்ளிய பறவைகள் காதலின் களிப்பிலே இருமனம் இணைந்த உல்லாச ஊர்வலம் நன்றி கவிஞர் நிரஞ்சலா நிரா, நெதர்லாந்து
ஆகாசப் பறவை
கவிஞர் இராம. இரவிதாசன் எண்ணத்தில் எத்துனை மாயங்கள் மனிதரில் காயத்தினுள்ளே ஆராத ரணங்கள் ஏமாற்றமிங்கே ஆகாசப் பறைவையாய் ஆனந்த வானில் நிலவோடுக் கொஞ்சி நித்தமும் முத்தம் சத்தமே இல்லா சந்தோச சொர்க்கம் வஞ்சகமில்லா வானிலேத் தேன்நிலா ஊர்வலம் ஐயமறியா ஆனந்தத் தாண்டவம் நெஞ்சமினிக்குமே உளர்ந்த இதயத்தின் ஒய்யாரக் கனவிது நன்றி கவிஞர் இராம. இரவிதாசன்.