பெயர் செல்வம்
புனை பெயர்
செல்வம் சௌம்யா
கணபாபுரம் கிராமம்
கீழ்பென்னாத்தூர் அஞ்சல். வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்

கவிஞர் செல்வம் சௌம்யா கவிஞர் பக்கம் சிறப்புக் கவிதை

இதுவா தீபாவளி

தமிழர்களை அசுரகளாய் ஊளையீட்டார் தரித்திரர்கள் ஆரியர்களே பொய்யினோடே பழந்தமிழர் பண்பாடு மறைக்க வென்றே புனைச்சுருட்டுச் செய்துவந்த ஆரியர் .தாமே தூயதமிழன் ராவணனை அசுரன் என்றார் தூய்மையில்லா மனதினராய் உலகில் நின்றார் நேர்நின்று திறனில்லா ராமன் தானோ புறம் நின்று குத்திட்டால் வீரன் தானாம் தமிழர்களோ தங்கமென உலகில் தோன்ற தமிழர்களை இரும்புக்கு நிகராய் சொன்னார் உயிரினத்தை கொல்லமையை கொண்ட நாட்டில் உயிரினத்தை கொல்வதுதான் விழாவே என்றார் பெண்ணினத்தை கொல்லமையை கொண்ட நல்லோன் நாகமவன் தமிழன்னை செல்ல மல்லன் […]

கவிஞர் செல்வம் சௌம்யா கவிஞர் பக்கம் கவிதை

தீபஒளி

கார்மேகம் திரண்டெழுந்து கடலலையை முத்தமிட செங்கதிரோன் திரண்டெழுந்து செம்பவள இதழ் திறக்க பூப்பெய்தப் புதுமலராய் பூமகளும் நாணினவே பூந்தென்றல் தானும் வந்து புத்தமுத மழைபொழிய கருவண்டு கண்ணழகி கருத்தோடு கோலமிட்டு செருந்தேனை முகத்திலிட்டு செந்தாமரை புன்னகையில் மொத்தமாய் ஏற்றி வைத்தாள் வல்லாளர் வகுத்த வழி தீபஒளி சித்திரமாய் வல்லாளர் வகுத்தவழி தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் கவிஞர் செல்வம் சௌம்யா

கவிஞர் செல்வம் சௌம்யா கவிதை

தென்னவள் அழகை கண்டு

தென்னவள் அழகை கண்டு தென்றலே வெக்கம் கொள்ள செவ்விதழ் மலர்ந்த மங்கை சேல்விழி பூவின் முல்லை அம்பொழில் பாய்ச்சும் மின்னல் அசைந்திடும் கொடியாள் நல்லாள் கருங்குயில் குரலில் தானும் கானமும் பாடும் கிள்ளை பொன்னிற வண்டு வந்து பூவையில் தேனை தேட. விரித்திட்ட மலரை போன்று விரித்தோகை யாடும் நங்கை நதிக்கரை நாணல் போல நளினமாய் நடந்தாள் அன்னம் கைகளின் வளையினோசை கலகலச் சிரிப்பை சிந்த சலசல நீரில் அங்கே குளித்திட ஆசை கொண்டாள் கொதித்திடும் வெய்யோன் […]

கவிஞர் செல்வம் சௌம்யா கவிதை மரபுக் கவிதைகள்

ஆயிரம் பூக்கள்

ஆயிரம் பூக்கள் யாவும் அடர்மரக் காட்டில் பூக்கும்! அருந்தமிழ்ப் பாக்கள் யாவும் அடர்மனக் கூட்டில் பூக்கும்! தேன்மொழி கடைக்கண் பார்வை தேவியென் மீதே பாயும்! தொடர்ந்திடும் துன்பம் யாவும்! துயர்பறந் தோடும் இன்பம்! தாயினும் சிறந்த நல்லாள்! தாள்களில் சரண்புகு தேன்மொழி தேவி அன்னாள்! கவிஞர் செல்வம் சௌம்யா

கவிஞர் செல்வம் சௌம்யா கவிஞர் பக்கம் கவிதை

கைபேசி கவிதை

அலைபேசி திரைமீது அலங்கார சிலையாக அதிகாலைப் பனிபோல அதிசய குளிர் மேனி பாராளும் தமிழச்சி பளிங்கான தளிர்மேனி விழிகூசும் விலைவாசி விளையாடும் சுகவாசி மொழிபேச அழைக்கின்றாள் முக்கால கதைபேசி பனிபோலக் குளிர்வீசும் பரல்போல இளநங்கை விலகாத விழியாலே விலையில்லா உறவாக உறவாட அழை கின்றாள் விளங்காத அவள் பார்வை விடையாக எனை தேட சுவையான விருந்தாக சுகம் நூறு தருகின்றாள் கவிஞர் செல்வம் சௌம்யா

கதை கவிஞர் செல்வம் சௌம்யா

மது

என்னம்மா வேணி உன் மகள் என்ன பன்றா உன் மகள் பன்ற வேலையை பாத்து மற்ற பெண் பசங்களும் கற்று கொள்வாங்க போல் ஏய் என் மகளை குற்றம் சொல்ல தான் வந்தியா இப்பதான் படித்து முடித்து வேலைக்கு போய் ஒரு மாசம் ஆகுது என் மகள் சொக்க தங்கம் என் தம்பிக்காக காத்திருக்கும் பொண்ணு தப்பு தண்டாவுக்கு எல்லாம் போக மாட்டா ஆமா என்னமோமா மார்கெட் போற வழியில் உன் மகளை பாக்ககூடாத இடத்தில் பார்த்தேன் […]

கவிஞர் செல்வம் சௌம்யா சிறுவர் பாடல்

சேலத்து மாம்பழமே

சேலத்து மாம்பழமே செவ்வான முழுமதியே சேயே எந்தன் தென் பொதிகை சந்தனமே தாயன நெஞ்சினிலே தித்திக்கும் தேன் கரும்பே என் கண்ணே கண்வளராய் தாலேலோ தாலேலேலோ தாய் நெஞ்சில் தாலாட்ட என் நெஞ்சில் நீ தேரோட்ட என் தங்கமே சிரிக்கின்ற உன்னழகில் செங்கமலம் பூக்குதடி தாய் நெஞ்சம் அதை கண்டு நெஞ்சமெல்லாம் இனிக்குதடி என் கண்ணே கண்ணுறஙககாய் தாலேலோ தாலேலேலோ உதைக்கின்ற காலுக்குமே ஒரு முத்தம் தந்திடவா சிரிக்கின்ற உன் முகத்தில் முத்தமழை பொழிந்திடவா இனிக்கின்ற உன்னழகில் […]

கவிஞர் செல்வம் சௌம்யா கவிதை

காதல்

ஆண்: தேன் குழைத்த தென்னவளே தெற்றிசையின் இளம்பரிதி நெற்றியிலே வைச்சவளே நேரெழுத்தாய் நீ எனக்கு நின்றாடும் வீணையடி . பெண்:தேன்குழைத்த தேன்தமிழில் உன்னழகை நானெழுத தாமரை போல் என் முகமும் தரையை நோக்கி கோலமிடும் . ஆண் : தாமரையின் புன்னகையில் தேன்சிந்தும் தென்னவளே நீகொடுத்த சீரெழுத்து நானிலத்தில் தாமரையோ தவழுமந்த தென்றலுடன் தேடி என்னை அணைக்குதடி . பெண்:கொஞ்சி யென்னை அணைக்கையிலே குற்றாலத்து சாரலடா அருகணைத்த தென்னவனே என்னினைவின் மன்னவனே சேர்த்தணைப்பாய் என்னுயிரை . ஆண் […]

கவிஞர் செல்வம் சௌம்யா சிறப்புக் கவிதை

தமிழ்மொழி கவிதை

அம்பு விடுத்தனையோ கம்பன்கவி மகளே நெஞ்சில் தைத்தனையோ வீசும் பார்வையிலே வம்பாய் வந்தனையோ வீரக் காதலிலே வலைவீசும் பார்வையிலே விலைபேசும் தென்னவளே சுரமெழில் சிந்தையிலே சுகமாகும் தேரழகே வரம் பெற்றேன் உன்னழகில் வளம்பெற்ற நெஞ்சதில் உயர்வான செந்தமிழில் ஊர் பேசும் காதலடி துயர்வந்து சேராத தூயதமிழ் சாரலடி கயலாடும் கண்களிலே காதலடி நீ யெனக்கு புகல்கின்ற வார்த்தைகளும் பூவை உன்னில் தஞ்சமடி பொன்மொழியாய் பகலிரவும் உன்நினைவு மின்னலடி நிகரில்லாப் பேரழகே நித்திலத்தின் தேரழகே நிறைந்தென்றன் இதயமதில் நின்றாடும் […]

கவிஞர் செல்வம் சௌம்யா சிறப்புக் கவிதை

தமிழ்மொழி கவிதை

பொங்கும் தமிழியோசை எங்கும் மணியோசை சந்தக் குயிலோசை சங்கத் தமிழோசை முந்துத் தமிழ் கொண்டு மதுரை தமிழ் பாட சிந்தும் தேன் போல சிரிக்கும் மலர் முல்லை வங்கக் கடலோரம் வார்த்தைக்கிளி கிள்ளை நுங்கின் குளிர் போல நகரும் பனி அன்னம் தெங்கின் சுவையோடு தெற்கின் தேன் கிண்ணம் அன்னம் அவள் தானே அசையும் தேரன்னம் பின்னுந் தளை கொண்டு மின்னும் மயிலாளே வண்ணக் கனவெங்கும் வண்ணமயில் அன்னாள் ். விரல் தொட்டால் மலர்வாளே விண்ணில் நிலா […]