கவிஞர் கணபதிசுவாமிக் குரு சுதர்சனக்குரு

கவிஞர் கணபதிசுவாமிக் குரு சுதர்சனக்குரு கவிஞர் பக்கம்

திருக்குறள் தேசிய நூலாகுக

*திருக்குறள் தேசிய நூலாகுக* ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே! அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து .. செய்கின்ற நம்வாழ்க்கை […]