சின்னஞ்சிறு கிளியே #########$######## சொல்வதை வழிமொழியும் சின்னஞ்சிறு கிளியே / செல்லமே கொஞ்சம் சுயமாய் சிந்தித்திடு / வாய் திறந்தே மௌனங்கள் துரத்திடு / ஒட்டுப் புல்லென கெட்டுப் போகாதே / வெட்டுக் கிளியாய் வெடிப்புறப் பேசு / மட்டிலா மகிழ்ச்சியில் உலகை வசமாக்கு / அறிந்தே நல்வழி என்றும் சென்றிடு / நாளைய உலகம் உன்னை நம்பியே … வேங்கடலட்சுமி ராமர்
தொடர்புடைய கட்டுரைகள்
கவிஞர் செல்வம்
வாசமல்லி கொடியிடையாள்! பச்சரிசிப் பல்லழகி! முந்திரிப்பூ மூக்கழகி! முத்துப்போல் சிரிப்பழகி! பட்டுப்போல் கன்னமவள்! பாட்டுடை மொழியழகி! செந்தமிழ்த் தேன்மொழியாள்! இஞ்சி இடுப்பழகி இலந்தை பழ பேரழகி நெஞ்சை தொட்டு கொஞ்சுமவள் நினைவில் வாழும் மங்கையவள் மரிக்கொழுந்து மயிலணையாள்! முல்லைப்பூ இடையழகும் கருநாக சடையழகும் பொல்லாத ஆசைகளை பொழுதெல்லாம் தூவுமவள்! பொன்வண்டு போலழகி பொங்குநதி கங்கையவள்! அன்ன நடையழகில் அசைந்தாடும் கார்குழலே கண்ணிரண்டும் கொஞ்சுதடி கன்னல் தமிழ் உன்னழகில் காதல் கணைதொடுக்குதடி கன்னித் […]
இளந்தை சேது
காதல் மேகமே ((((( நிறைவான அன்போடு ஓடியே தேடிடுவாய் / காதலால் கசிந்துருகி கவியாகி இசையாக / விழியாலே அழகூட்டி விருப்பத்தை மெருகூட்டி / அழகோவிய ஆரணங்கே மேகத்திலே கலந்துவிடு //// இளந்தை சேது
ஆயிரம் பூக்கள்
ஆயிரம் பூக்கள் யாவும் அடர்மரக் காட்டில் பூக்கும்! அருந்தமிழ்ப் பாக்கள் யாவும் அடர்மனக் கூட்டில் பூக்கும்! தேன்மொழி கடைக்கண் பார்வை தேவியென் மீதே பாயும்! தொடர்ந்திடும் துன்பம் யாவும்! துயர்பறந் தோடும் இன்பம்! தாயினும் சிறந்த நல்லாள்! தாள்களில் சரண்புகு தேன்மொழி தேவி அன்னாள்! கவிஞர் செல்வம் சௌம்யா