கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி
***************************************************************************
பெயர் : ஜென்ஸி
வசிப்பது : சென்னை
சொந்த. ஊர் : திருச்சி மாவட்டத்தில் குளித்தலை.
கவிதைகள் வெளியான. நூல்கள் : நான் நீ இந்த. உலகம்
பனி விழும் மலர் வனம்.
கால நதியெங்கும் கவிதை வாசம்.
தேரோடும் வீதி.
என்ன. சொல்லப் போகிறாய்..?
மற்றும் முண்ணனி தினசரி. மாத. வார. இதழ்கள்.
எழுதி வெளியிட்டுள்ள. நூல்கள் : சிறுகதைத் தொகுப்பு–1
கவிதைத் தொகுப்பு–2
ஹைக்கூ தொகுப்பு–1.
பெற்றுள்ள. பட்டங்கள் :
நேயச் சுடரொளி
கவிச்சிகரம்.
இலக்கியத் தென்றல்.
முகவரி : ஜென்ஸி
C/0 கே. ராஜேஸ்தமிழ்வாணி.
9–S 2 ஸ்ரீ லட்சுமி ஹோம்ஸ்
பிரியாநகர் 3 ஆம் பகுதி
ஆறாவது தெரு.
ஊரப்பாக்கம்–603210
சென்னை.
கைபேசி ;8838600138
மின்னஞ்சல் : Selvarasujensi @, gmail.com.
கவிஞர் ஜென்ஸி எளிமையான தோற்றம் உடையவர். நிரந்தர பணியின்றி தற்காலிகமாக குறைந்த ஊதியத்தில் பணிசெய்து குடும்பத்தை காப்பாறுகிறார். தமிழில் தணியாத தாகம் கொண்டவர். :
தன்முனைக் கவிதைகள் குழுமத்தில் 1500 க்கும் அதிகமான. தன்முனைக் கவிதைகள் எழுதிக் குவித்துள்ள இவர் ஹைக்கூ படர்பார்வை. உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் ஆகியவற்றில் ஏராளமான. ஹைக்கூக்கள் நாள்தோறும் எழுதி வருகிறார். கவியரசர் கண்ணதாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ள இவரது ஹைக்கூ கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. எளிமையான சொற்களால் உள்ளன. தற்கால ஹைக்கூ கவிஞர்களில் இவரும் கொண்டாடப்படவேண்டிய கவிஞர். இவர் மேலும் சிறந்த ஹைக்கூ கவிதைகள் படைத்து தடம் பதிக்க வாழ்த்துகிறோம்
இனிய வாழ்த்துகளுடன்
…..கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள்
உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்
- நாத்திகர் வாங்கிய.
நாட்காட்டியிலும் இருக்கிறது
இராகு காலம்.
- மரத்தை வரைகிறது.
தன் எச்சத்தால்
ஒரு பறவை.
- மணல் வீடு கட்டி
விளையாடுகிறார்கள்
கடற்கரை காதலர்கள்
- மலை உச்சியிலிருந்து
மெல்ல. நழுவுகிறது
மேகத்தின் நிழல்
- இரவு நேரத்தின்
மௌன விசும்பல்
முதிர்கன்னி
- தத்துவப் புத்தகம்
படித்துப் பார்க்கிறார்
விலையை
- வேடனின் குறிக்குத்
தப்பிப் பறந்தது
குயில் பாட்டு
- வெட்ட. வெளியில்
நடந்து முடிந்தது
மகரந்த. வேட்டை
- யார் கண் பட்டதோ..
விற்பனை மந்தம்
பூசணிக்காய்
- குவளை நீரில்
தெளிவாய் தெரிகிறது
பாத்திரத்தின் அழுக்கு
- என்னைப் போல் ஒருவன்
எட்டிப் பார்க்கிறான்
நீர் நிறைந்த. கிணறு
…….ஜென்ஸி