கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் வரிசையில் கவிஞர் சாரதா க. சந்தோஷ் , ஐதராபாத்..
அவர்களைப்பற்றிய குறிப்புகளும் அவரது ஹைக்கூ படைப்புகள் சிலவும் இங்கே பகிர்வதில் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மகிழ்கிறது.
பெற்றோர்:
திரு. கண்ணன் ஜானகி ராமன்..
திருமதி. ராஜலட்சுமி
திருநெல்வேலியில் பிறந்து..திருமயிலையில் வளர்ந்த கவிஞர் சாரதா க.சந்தோஷ் சிறு வயதிலிருந்தே..இயல்.. இசை.. நாடகத்தில் ஆர்வம் அதிகம்..
பள்ளிகளில் எல்லாவிதமான போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்
மயிலை கஸ்தூரிபாய் சிறுவர் சங்கம் வாயிலாக ஒவ்வொரு வருடமும் சென்னை All India Radio வில் சிறார் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சிறப்பிடம் பெற்றவர்.
வணிகவியலில் எம்.காம் பட்டம்.. மற்றும் எம்.பி.ஏ(மார்க்கெட்டிங்).இந்தியில் பி.ஏ பட்டம் பெற்ற கவிஞர் விமானப்படை வீரர் திரு. சந்தோஷ் மகாதேவனை மணந்து கொண்டவர். இவருக்கு அபிஷேக் செல்வமகனாக படித்து வருகிறார். சென்னை.. புதுதில்லி..என வசிப்பிடங்களைக் கொண்டு வாழ்ந்து அஸ்ஸாமில் ஹோண்டா.. ஜி. எம்.. டாட்டா டீலர்களில் 15 வருடங்கள் பணி புரிந்து..பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று..மொழிகள் பல கற்று….சாதி மத பேதமின்றி மதநல்லிக்கணத்துடன் வாழ்ந்து வருபவர் .
வீடு தேடி வருவோர்க்கு அறுசுவை உணவு படைத்து வரும் இவரின் இதய தெய்வம் திருமதி சங்கரி பாட்டியின் நினைவாய் #சங்கரி கபே யெனும் பெயரில்..முகநூலில்காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பல மாநிலங்களின் #250 உணவு வகைகளை ஆங்கிலத்தில் எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
இன்று ஐதராபாத் மாநகரத்தில்கூட்டுக்குடும்பத்தில் கூடி மகிழ்ந்து.. இரண்டாண்டு காலமாக தமிழன்னையின் ஆசியுடன் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து..
200 க்கும் மேற்பட்ட இணைய குழும போட்டிகளில் வெற்றி பெற்று..புதுக்கவிதை..குறுங்கவிதை..ஹைக்கூ..பாடல்கள்..மீ மொழி/நவீன கவிதை..ஒரு பக்க கதை..தமிழில் கசல் தன்முனைக் கவிதை யென
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்சுவை கவிதைகளை எழுதியுள்ளார்.
#ஒரு துளி கடல்.. (புதுக்கவிதைகள் 110)
#மின் கம்பியில் குருவிகள் (ஹைக்கூ வகை)
இரு நூல்களை வெளியிட்டு..உலகளாவிய 18 தொகுப்புகளில் இவரது
படைப்புகள்.. இடம் பெற்றன.. மின்னிதழ்கள்..இலக்கிய இதழ்கள்.. கவிஞர் தில் பாரதியின் குரலில் *யூ ட்யூப் ல் * இவரது படைப்புகள் அரங்கேறியுள்ளன.
HD கனடா 🍁வானொலியில் இவரது காதல் கவிதைகள் அரங்கேறின..(R J Jothy kumar)
மேலும் ஐதராபாத் raibow fm லும் ஹைக்கூ தினமன்று.. இவரது சர்வதேச ஹைக்கூ வெற்றியை சிறப்பித்தார்கள்.. (R J Deepa) சர்வதேச iaforhaikuaward.org நடத்திய ஆங்கில ஹைக்கூ போட்டியில் 71 நாடுகளிலிருந்து வந்த 700 ஹைக்கூக்களில் வெற்றி பெற்ற 20 ஹைக்கூ கவிஞர்களில்கவிஞர் சாரதாவும் ஒருவர் (இந்தியாவிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே) என்பது குறிப்பிடத்தக்கது )
மக்கள் டிவியில் எழுத்தாளர் சீனிவாசன் இவரது நூல்களை.. நூலாய்வு செய்தார்..
மேலும் தமிழ் வளர்க்கும் முகநூல் குழுமங்களின் தமிழ் நற்பணிகளில்..தொகுப்பாசிரியர்..நடுவர்.. நிர்வாகம் போன்ற களப்பணியாற்றி..
பாராட்டுகள் பெற்றவர் .
நான் நீ இந்த உலகம்.. பனிவிழும் மலர்வனம் போன்ற 20க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் பணியாற்றியுள்ளார் .
இவரது துளிப்பா படைக்கும் திறமையை பாராட்டி..சமீபத்தில் மார்ச் 2019..இலக்கியச் சாரல் அமைப்பு.. #துளிப்பா இளவரசி யெனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.. மேலும் மணவை முஸ்தபா அறிவியல் ஆராய்ச்சி மையம்..
தமிழ் ஆளுமைகள் எனும் தலைப்பில் .. இவரது வாழ்க்கையை
யூடியூபில் ஆவணப்படுத்தி.. நேர்காணல் செய்து சிறப்பித்தனர்..
கவிஞர் கவிமதியும் SK சானலுக்காக நேர்காணல் செய்தார்..
பல மேடைகளில் கவியரங்கத்தில் .. பட்டிமன்றத்தில் .. கருத்தரங்கத்தில்
பங்குகொண்ட கவிஞர் சாரதா க.சந்தோஷ் தமிழ்நெஞ்சம்.. நிறை.. இனிய உதயம்.. உரத்த சிந்தனை.. மகாகவி.. .போன்ற இதழ்களில்..
தமிழ் ஆளுமைகளை நேர்காணல் செய்வது.. இளங்கலைஞர்களை அறிமுக படுத்துவது எழுதுவது.. நூல் மதிப்புரை எழுதுவது.. பல தலைப்புகளில் கட்டுரை எழுதுவது..கவிதைகள்.. விமர்சனம் எழுதுவது போன்றவற்றையும் எழுதி வரும் பன்முகத்திறனாளி இவர்.
உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான கவிஞர் சாரதா க.சந்தோஷ் அவர்கள் , திருச்சியில் நடைபெற்ற விழாவில்.. சிறந்த ஹைக்கூ கவிஞர்களுக்காக வழங்கப்படும் #மித்ரா துளிப்பா 2019 ஆண்டிற்கான விருதைப் பெற்றவர்
#ஆகஸ்ட் 2019 முனைவர் சுந்தர முருகனின்.. இருபதாம் நூற்றாண்டுப் பெண் கவிஞர்கள் எனும் ஆராய்ச்சி நூலில் இடம் பெற்றுள்ள பெண் கவிஞர்களில்
இவரும் இடம்பெற்று சிறப்பு பெற்றார்.
#வருகிற பிப்ரவரி 2020ல் கவியுலகப் பூஞ்சோலை குழுமத்தின் நான்காம் ஆண்டு விழாவில் #தமிழ்ச் சேவை செம்மல் விருது அளித்து கவுரப்படுத்துகிறார்கள்..
அண்மையில் தன்முனைக் குழுமத்தின் கம்போடியா அங்கோர்வாட் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் செப்டம்பர் 21-22 ந்தேதி.. 52 உலகளாவிய கவிஞர்களின் #வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்..கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுப்பாசிரியராக வெளியிடப்பட்டது.. இந்நூலை தொகுக்கவும் உதவியுள்ளார். மேலும் இவரது படைப்புகளும் இடம்பெற்றன..
தற்சமயம் தமிழ்நெஞ்சம் இதழின் ஹைக்கூ 2020 நூல்களுக்கான தொகுப்பு நூல் பணிகளை செய்து வருகிறார்.#ஐதராபாத் நிறை இலக்கிய வட்டத்தின் செயல் உறுப்பினராக தமிழ்ப் பணிகளை செய்து வருவதோடு …..
#அனைத்தையும் தமிழன்னை எமக்களித்த கட்டளையாக எண்ணி அகமகிழ்ந்து மன நிறைவுடன் ஈடுபட்டு வருகிறேன்.. என மகிழ்வோடு பகிரும் கவிஞர் மேலும் மேலும் இலக்கிய உலகில் சாதனைகள் பல புரிந்து ஹைக்கூ படைப்பாளியாக சிறந்தோங்க வாழ்த்துகிறோம்.
…….கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள்
உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை.
கவிஞர் சாரதா க.சந்தோஷ் அவர்களின் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம். இனிய வாழ்த்துகள்.
**சேவல் சண்டை
காலில் பலத்த காயம்
கூட்ட நெரிசல்
**கல்லறைப் பெட்டியில்
படிந்து எழுகிறது
தச்சனின் நிழல்
**ஒற்றுமை உணர்வு
எக்கச்சக்கமாய் கூடியது
மின்கம்பியில் குருவிகள்
**சிறு குழந்தையின்
முதுகில் சவாரி செய்கிறது
கரடி பொம்மை..
**ஓகிப் புயலில்
ஓரமாய் ஒதுங்குகிறது
ஓரிறகு..
ஓடும் கடிகாரத்தில்
சிறைபட்டு கிடக்கிறது
மனித வாழ்க்கை..
பேருந்தில் பயணம்
நெரிசலில் கீழே விழுகிறது
வியர்வை துளி..
**பட்டமரம்
காய்த்துக் குலுங்குகிறது
மிளகு கொடி..
**சாக்கடையில்
மிதந்து வருகிறது
பெண் சிசு..
**குளிரிரவில்
வியர்வை துளிகள்
தேனிலவு..
…………சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்
(குறிப்பு: ஹைக்கூ சிறப்பிதழ் அருவி, மின் கம்பியில் குருவிகள் , பனிவிழும் மலர்வனம், இலக்கியச்சாரல் நூல்களில் இடம்பெற்றவை..மேலும் மித்ராஅம்மையார் ,இளையபாரதி, சிந்தைவாசன், அமுதபாரதி, நீலநிலா செண்பகராமன் போன்றோர் ரசித்துக் குறிப்பிட்ட சாரதாஅவர்களின்ஹைக்கூ கவிதைகள் மேலே