சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பாவையே அற்புத மலரே அளப்பரிய செல்வமே செல்வக் களஞ்சியமே பொற் பாவையே மலர் ஒன்று தேன் பருகுதே மலர்கவே நினது வளமான பருவம் கற்றிடு ஆர்வமாய் ஆயகலைகளை சிறப்பாய் சிறு மலரே சிரித்திடுவாய் சிங்காரமாய் பெண்குழந்தைகளே நாளைய நாட்டின் செல்வங்கள் ! கிருஷ்ணபிள்ளை சிவராமன்
தொடர்புடைய கட்டுரைகள்
காதல்
ஆண்: தேன் குழைத்த தென்னவளே தெற்றிசையின் இளம்பரிதி நெற்றியிலே வைச்சவளே நேரெழுத்தாய் நீ எனக்கு நின்றாடும் வீணையடி . பெண்:தேன்குழைத்த தேன்தமிழில் உன்னழகை நானெழுத தாமரை போல் என் முகமும் தரையை நோக்கி கோலமிடும் . ஆண் : தாமரையின் புன்னகையில் தேன்சிந்தும் தென்னவளே நீகொடுத்த சீரெழுத்து நானிலத்தில் தாமரையோ தவழுமந்த தென்றலுடன் தேடி என்னை அணைக்குதடி . பெண்:கொஞ்சி யென்னை அணைக்கையிலே குற்றாலத்து சாரலடா அருகணைத்த தென்னவனே என்னினைவின் மன்னவனே சேர்த்தணைப்பாய் என்னுயிரை . ஆண் […]
தொலைக்காட்சித் தொடர் ஆரம்பம்,
நமது அடுத்த நிகழ்வு இதோ, தொலைக்காட்சித் தொடர் ஆரம்பம், #தமிழ்க்கவிஞர்வரலாறு வரும் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது, கவிஞர்களின் பேட்டியினைத் தொடர்ந்து வெளியிட உள்ளோம்! இத் தொடர் #கவிஞர்_வரலாற்றினில் இணைந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட தமது முழு விபரத்தினை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டுகிறேன் 1.பெயர் 2.வயது 3.ஆண்/ பெண் 4. ஊர் 5.பணி 6.முகவரி 7.கைப்பேசி எண் 8.மின்னஞ்சல் 9.பெற்ற விருதுகள் 10.சார்ந்துள்ள இலக்கிய அமைப்புகள் 11.வெளியிட்ட நூல்கள் 12.தமிழ்ப் பணியில் தங்கள் அனுபவம் […]
ஆஸாத் கமால்
சின்னஞ்சிறு கிளியே வட்டக் கண்ணழகே வானவில்லுப் பொட்டழகே/ வாசமிகு மல்லிகையே வலிதீர்க்கும் புன்னகையே/ கள்ளச் சிரிப்பாலே காயங்கள் ஆறுதடி/ கவலைகள் தொலைந்து மாயமாய்ப் போகுதடி/ தென்பாண்டித் தமிழை தேனொழுகும் இதழே/ தேவதையாய் மண்ணிலே தோன்றியவள் நீதானோ/ சின்னஞ் சிறுகிளியே சிந்தைக்குள் பூவிதழே/ சிறகடிக்கும் வெண்ணிலவே சிறையானேன் உன்னிடமே/ ஆஸாத் கமால்.