கவிதை

கவிஞர்.ஏரூர் கே. நெளஷாத்

சின்னஞ் சிறுகிளியே. சின்னஞ் சிறுகிளியே செல்வப் பொக்கிசமே / சிந்தை கவர்ந்தவளே சிறிய அற்புதமே / உன்னைக் காணாவிடில் உள்ளம் பதறுதடி / உலகே நீயெனவே சிந்தை தேடுதடி / கண்ணென நீயிருந்தாய் கருத்தாய் நானிருந்தேன் / கவிதைபோல் உனது கதையை கேட்டிருந்தேன். / எண்ணமெலாம் தினமும் ஏக்கம் தொடருதடி / கண்முன்னே இருக்க கணமும் நாடுதடி . கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *