கவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு =================================நானும் என் தம்பியும்…………………………….. அவனுக்கும் எனக்கும் ஒருவயதுதான்வித்தியாசம் அம்மா வேலைக்குபோயிடும் போகும்போது தம்பிய பத்திரமாப்பாத்துக்கன்னு சொல்லிட்டு மத்தியானத்துக்கு சமைச்சிவைச்சிட்டுப்போயிடும் அப்புறம் எங்க ஆட்டம்தான் வீடு ரெண்டாயிடும் அவன் எனக்கும் நான் அவனுக்கும் மாத்திமாத்திக் குளுப்பாட்டி விளையாடுவோம் ஒருதடவை அஞ்சுகிலோகோதுமைமாவு இன்னொருதடவை இரண்டுலிட்டர் நல்லெண்ணை ஒருவாளி அரிசிமாவு அம்மா வந்துபாத்துட்டு அடி என்னைச்சாத்துவாங்க அலறுவேன் அடுத்து தம்பிய அடிப்பாங்கன்னு ஆவலாக்காத்திருப்பேன் அவனை உச்சிமோர்ந்து கொஞ்சுவாங்க என் செல்லம் புஜ்ஜின்னு எனக்குக்கோபம் கோபமா வரும் அம்மா சொல்லுவாங்க அவனுக்கென்ன தெரியும் பச்சமண்ணு நீதான் செஞ்சிருப்பே ஒருதடவ கடுப்பாயி மொளகாப்பொடில குளிப்பாட்டிட்டேன் அவன் அழுகவேஇல்லை அம்மா வந்து பார்த்துட்டு அடப்பாவி என் செல்லத்தை கொல்ல இருந்தியேடான்னு அன்னிக்குகுடுத்த அடி இன்னும் வலிக்குது ஆனா அவன் சாதாரண ஆள் கிடையாது கொளம்புல ஒருநாள் உப்பை அள்ளிக்கொட்டிட்டான் அதுக்கும் எனக்குத்தான் அடி ஒருநாள் கொளம்புல பேனா மையக்கொட்டிட்டான் அதுவும் கறிக்கொளம்புல சிவப்பு மைய கொளம்பே ஒருமாதிரி ஆயிடுச்சு இன்னிக்கும் நமக்குத்தான் அடின்னு ஓடிப்போய்ட்டேன் அம்மாயி ஊருக்கு நாள் பூராம் தேடி கடைசில கண்டுபிடிச்சாங்க நான் வரமாட்டேன் வந்தா அடிப்ப நான் செய்யல அதை என்று அடம்பிடித்தேன் அம்மா கட்டிப்புடிச்சு அழுதாங்க தெரியும்டா…அவனை அடிக்கமுடியாதுல்ல இருந்தவரைக்கும் அவனுக்கும்எனக்கும்ஆகாது அது ஏன்னே தெரியல கடைசிவரை அப்படியே இப்போ அவன் இல்லை கண்ணீர் பெருகுது அவனை நினைச்சா