வெற்றிக்கொடி வெற்றிக்கொடி உங்கள்படி எட்டிப்பிடி அதனை வாழ்வில்துடி நூலைப்படி அன்புப்பிடி காண்போம் தாயின்மடி உன்வாழ்வில் ஏணிப்படி அன்றோ துள்ளலடி கவிதைகளின் ஓசையடி ஆகும் தேசத்தின் உயிர்நாடி ஒளிவீசும் கொடியே பாசத்தில் மனம்நாடி வளம்தேடி வாழ்வோம் குணம்நாடி இருந்திட்டால் பகையோடி ஒழியும் இவையெல்லாம் உயிர்நாடி வெற்றிக்கொடி வாழ்வில். எழுத்தாளர் கே ஜி ஜவஹர்
தொடர்புடைய கட்டுரைகள்
இராம . இரவிதாசன்.
காத்திருக்காதே நிலவே //////%%%%///////%%%/////// இரவிற்கு நிலவழகு உறவிற்கு மனமழகு இளமைக்கு உடழகு பருவத்தில் காதலழகு நாவிற்கு சொல்லழகு எனக்கோ அவளழகு அவளிதழோடு நானுரச இளைப்பாறு வெண்ணிலவே நன்றிடன் இராம . இரவிதாசன்.
காதல்
நெருங்கிவந்தாள் பூவையவள் பூமலர்ந்த காதலுடன்! கனித்தமிழ் சொல்லெடுத்து காதலித்தாள் என் மனசை! களிப்புமிகு காதலதை கண்பருகக் கண்டனனே! பூவிரிந்த சோலையிலே புகுந்துவந்தாள் எழிலழகாள்! புரிதலிலே பொங்குமவள் பொன்னியவள் அத்தை மகள்! சோதனைகள் தாண்டியவள் சொந்தம் கொண்டாள் என்னிடத்தில்! கவலையின்றிப் போனதுவே காத்திருந்த காலமதில் ! ஆடுகின்ற என் மனசில் காட்டிடுவாள் பாசமதை! அயிரைகெண்டை விழியினிலே அணைத்திடுவாள் என்னுயிரை! அழகுநெஞ்சம் அவளழகே அள்ளும் நெஞ்சம் என் மனசே! ஆடைகட்டிச் வந்தமயில் ஆழ்மனதில் தங்கிவிட்டாள்! உவகைபொங்கும் உள்ளமதில் உறவாகி நின்றுவிட்டாள்! […]
கவி. செங்குட்டுவன்
தாலாட்டு…… எட்டிவிடும் தூரத்தில் நீயும் இருந்திட்டால் எந்தன் ஏக்கமும் தூக்கமும் மறையுமே தட்டிவிடும் தூரத்தில் நீயும் இருந்திட்டால் தாலாட்டு பாடச்சொல்லி தூங்கிடுவேன் நானே…