கவி. செங்குட்டுவன் வானமே எல்லை வானத்தையே எல்லையாய் வகுத்துக் கொண்டவர்கள் மானத்தை காத்திட மயக்கம் கொள்ளாதவர்கள் ஊனமே உடலில் உயர்வாய் இருந்தாலும் தானமதை அளிப்பதில் தவறாமல் ஈடுபடுவர்………. வெற்றி என்னும் வேத வாக்கை பற்றிக் கொண்டே பறந்து செல்பவர்கள் மற்ற எதையும் மனதில் கொள்ளாமல் கற்ற வித்தைகளை களத்தில் விதைப்பர்………..
காதலி என்னை நீ காதலி கனவில் வருகிறாய் கதைகள் கூறுகிறாய் காதில் பேசுகிறாய் காதல் சொல்கிறாய் களவாயும் வருகிறாய் களவாடிச் செல்கிறாய் கண்களாலும் பேசுகிறாய் கலந்தும் நிற்கிறாய் கருணையும் காட்டுகிறாய் காமமும் ஊட்டுகிறாய் களித்தும் அணைக்கிறாய் கரும்பாகவும் இனிக்கிறாய் காதலில் நாம் கனிந்தே கலக்கின்றோம் !
ஆந்தை போல் விழிக்கும் உன்னால் அடங்காத சிரிப்பை கொண்டேன் சேற்றிலே மிதக்கும் பூவாய் சேல்விழி மிதக்கும் அன்பே விரிந்த வான் நிலாவில் அங்கே விளைந்ததோர் அழகு நீயே திரிந்திடும் காற்றை போல திரிந்திடும் பார்வை உன்னில் தெரிந்ததோர் நாணம் ஒன்று தீண்டுதே மேனியெங்கும் புரியாத உன்றன் பார்வை பூவையின் புதுமை போர்வை அசைவது உன் விழியினோடு அலைவது நெஞ்சம் தேடி கலைவது கனவு எங்கும் காண்பது உன் நினைவில் நன்றாம்