கவிஞர் நிரஞ்சலா நிரா, நெதர்லாந்து
ஆசைகள் விரிய
ஆனந்தம் கூத்தாட
வண்ணச் சிறகும்
வானில் பறக்க
மங்கையின் மனதில்
கற்பனைக் கோலங்கள்
காதலும் கவிபாட
காற்றோடு கானமாக
நெஞ்சிலே மஞ்சமிட்ட
மன்னவன் எண்ணமே
பஞ்சென மேகமும்
கொஞ்சியே அழைத்திட
துள்ளிய பறவைகள்
காதலின் களிப்பிலே
இருமனம் இணைந்த
உல்லாச ஊர்வலம்
நன்றி
கவிஞர் நிரஞ்சலா நிரா, நெதர்லாந்து